Skip to main content

பிடிபட்ட 5 கோடி... அரியலூரில் பரபரப்பு!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

money incident in ariyalur

                                             கோப்புப்படம் 

 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில், அரியலூரில் சாத்தமங்கலம் என்ற பகுதியில், உரிய ஆவணம் இன்றி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 5 கோடி ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் இருந்து பாரத் ஸ்டேட் வங்கிக்குப் பணத்தை எடுத்துவந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால், உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்படும் பணம் லட்சம் என்ற அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், அரியலூரில் 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்