Published on 21/12/2022 | Edited on 21/12/2022
![பரக](http://image.nakkheeran.in/cdn/farfuture/oDRclPdz3AHD6W9PqfbtgPQRRcXTBNgNeAnaAhcQ7zw/1671634918/sites/default/files/inline-images/hkj%3B.jpg)
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் மூலம் ஆந்திராவுக்குக் கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குக் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதுதொடர்பாக போலீசார் மாநில எல்லைகளில் தீவிர சோதனை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் காவல்துறைக்குப் புகார் வந்த நிலையில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்குக் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணைக்குச் சென்றனர். அப்போது ரயிலில் ஏற்றுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.