24 மணி நேரத்தில் கிருஷ்ணசாமி
மன்னிப்பு கோரவேண்டும்:சிவசங்கர்
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துகளால் மனரீதியாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும். அனிதா மரணம் குறித்து அவதூறாக பேசிய பேச்சுக்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.