ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் தற்போது வெளியாகி இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த 2.0 படத்தின் முன்னோட்ட காட்சிகள் விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியாகியுள்ளது. டீசர் வெளியானதை முன்னிட்டு 2.0 டீசர் தினம் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.