Published on 04/02/2021 | Edited on 04/02/2021

காஞ்சிபுரம் அருகே கல்குவாரியின் பாறை சரிவுகளில் 20 க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரம் அருகே உள்ள மதூரில் கல்குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, காவல்துறையினர், மீட்பு படையினர் ஆகியோர் விபத்து ஏற்பட்ட கல்குவாரிக்கு வருகை தந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட இடம் மிகவும் குறுகலானது என்பதால் மீட்புப் பணி சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 2 பேரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இந்தப் பாறைச்சரிவு விபத்தில் ஒரு ஜேசிபி வாகனமும், 5 லாரிகளும் முழுவதுமாக இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன. இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.