Published on 31/07/2020 | Edited on 31/07/2020
திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மீண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. அதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் முதலியன எவ்வளவு நேரம் இயங்க வேண்டும் என்பது குறித்தான வழிமுறைகளை அறிவித்திருந்தது. திருமணம் தொடர்பான அறிவிப்புகளை அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை சிலர் எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, “திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ-பாஸ் எடுத்து செல்ல வேண்டும் என்றும், திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.