கரோனா வைரஸ் தொற்று நோயுடன் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர் சில நாட்கள் ஈரோடு மசூதிகளில் தங்கியிருந்ததால், அந்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஈரோட்டில் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட அட்சியர் கதிரவன், "ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டவர்கள் 7 பேர் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது என்பது மருத்துவ சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
![erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/KIBsLX9mOVbnSO8UV1q2kAoRXEFV2mZh6d9odfhn_0k/1584957538/sites/default/files/inline-images/ee32.jpg)
அந்த தாய்லாந்து நபர்கள் தங்கியிருந்த பகுதியில் அவர்களோடு பழக்கத்தில் இருந்தவர்களுக்கும் நோய்தொற்று இருக்குமா என்ற எச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை மசூதி அருகிலேயே குடியிருக்கிற 169 குடும்பங்களை சேர்ந்த 694 பேர் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் தங்களது இல்லத்திலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். அவர்களை புது நபர்களோ உறவினர்களோ யாரும் சந்திக்க செல்லக்கூடாது, அவர்களும் வெளியே வரக்கூடாது என கூறியுள்ளோம். இந்த 694 பேரும் 14 நாள்களுக்கு மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களது குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றார் ஆட்சியர்.