![10,000 students absent ... shocking Anna University!](http://image.nakkheeran.in/cdn/farfuture/jAAbPczU3YfwZIo5gs2fOIFT9gLXUmHdMtUJQov6qss/1647752573/sites/default/files/inline-images/z58_4.jpg)
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து மார்ச் 12 ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கும் நிலையில் மதியம் 12.30 க்கும் விடைத்தாளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் ஒன்றரை மணிநேரம் கிரேஸ் டைமும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் விடைத்தாளை பதிவேற்றம் செய்யாத மற்றும் கால அவகாசத்தை கடந்து விடைத்தாளை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை குறிக்கும் வகையில் 'ஆப்செண்ட்' என தேர்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்செண்ட் போடப்பட்டதால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேபோல் தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாளை திருத்த வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு வந்த பேராசிரியர்களிடம் முன்னரே அறிவுறுத்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் 10,000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் சூழல் ஏற்பட்டுள்ளது.