மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆந்திராவில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மின்விசிறி சின்னம் ஒதுக்கப்பட்டது.
தேர்தல் விதிகளின்படி, கட்சி சின்னத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடாது. இதைவைத்து இப்போது ஆட்சியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஒரு மனுவை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளது. அந்த மனுவில் தேர்தல் முடியும்வரை மின்விசிறியை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடாது என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவால் அரசு அலுவலர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த மனுவைப் பெற்ற அந்தப் பகுதி தாசில்தார் ஜனார்தன் சேத்தி உடனடியாக அரசு அலுவலகங்களிலுள்ள மின் விசிறிகளை அகற்றக்கூறி உத்தவரவிட்டார். மேலும் அந்த மனு குறித்து தேர்தல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.