Skip to main content

மக்கள் மீதே பழியைச் சுமத்துகிறார் முதல்வர்... முத்தரசன் கண்டனம்...

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

R. Mutharasan



நாகைக்கு மே தின நிகழ்வுக்கு வந்திருந்த முத்தரசன், "கரோனா தடுப்பு பணியில் தோற்று போய்விட்டோம் என்கிற பயத்தில் மக்கள் மீதே பழியைச் சுமத்துகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி" எனக் கண்டனம் தெரிவித்தார்.
 

மே முதல் நாளான உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாகையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிபிஐ மற்றும் சிஐடியு கொடிகளை ஏற்றி வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். 
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முத்தரசன், "கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என உழைப்பாளர்கள் அனைவருக்கும் செம்மாந்த நன்றி. கரோனா பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சனம் செய்வது ஜனநாயக கடமை. 
 

மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கருத்துரிமையைப் பறிக்கும் செயல். நாளுக்கு நாள் தமிழகத்தில் கரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா தடுப்பு பணியில் தோற்று விட்டோம் என்ற பயத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா பாதிப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்காததுதான் காரணம் என மக்கள் மீதே பழியைச் சுமத்துவது நியாயம் இல்லை. எனவே மே 3 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீடிக்குமா? என்பதை அரசு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்