தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் நினைவு தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடம், அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார். பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேலூரில் கட்சிக்குள் புதியதாக ஒருவரை களம்மிறக்கியுள்ளனர் துரைமுருகன் ஆதரவாளர்கள். வேலூர் மாவட்டம் காட்பாடியில் கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. திமுக கட்சி சார்பில் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி சேலை மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகனின் பேரனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகனும்மான "இளவரசன்" முன்னிலை படுத்துப்பட்டார். விழாவிற்கு இளவரசன் தனது அப்பா கதிர் ஆனந்தோடு வந்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பின்பு பொது மக்களுக்கு வேட்டி சேலை பிரியாணியை வழங்கினார். இது அங்குள்ள சீனியர் திமுக கட்சிக்காரர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
கட்சியின் வளர்ச்சிக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போஸ்டர் ஒட்டி கொடிபிடித்து தலைவா வாழ்க என கோஷமிடும் தொண்டனை, நிர்வாகிகளை விட்டுவிட்டு கட்சிக்காக எதையும் செய்யாமல் வெளிநாடுகளில் தொழில் செய்துக்கொண்டும், கல்லூரி தொடங்கி நிர்வாகம் செய்துக்கொண்டு இருந்த தனது மகன் கதிர்ஆனந்தை திடீரென கட்சிக்குள் கொண்டுவந்து காலம் காலமாக வேலை செய்துக்கொண்டு இருந்தவர்களை ஒதுக்கிவிட்டு துரைமுருகன் மகன் என்கிற ஒரே தகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி சீட் வாங்கிதரப்பட்டு வெற்றி பெற்றார்.
மக்கள் பிரதிநிதியானபின் தொகுதி மக்களுக்கு என சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யாமல் மக்களிடம், கட்சியினரிடம் எதிர்ப்பை சம்பாதித்தார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் தரக்கூடாது என கட்சியினரே தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு கதிர்ஆனந்த் தான் வேட்பாளர், அவரை வெற்றி பெறவையுங்கள், கோஷ்டி சண்டை வேண்டாம் எனச்சொல்லி மீண்டும் சீட் தந்து களத்தில் நிறுத்தப்பட்டார்.
தேர்தல் களத்தில் 18 வயது கூட நிரம்பாத கதிர்ஆனந்த் மகன் சிறுவன் இளவரசன் தேர்தலில் அப்பாவுக்காக ஓட்டுக்கேட்டது சர்ச்சையானது. இந்நிலையில் கலைஞரின் பிறந்தநாளுக்கு துரைமுருகன் பேரன் இளவரசனை அழைத்துவந்து மக்களுக்கு பிரியாணி தரச்செய்துள்ளது திமுக தொண்டர்களாளே அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. கதிர்ஆனந்த் தனது மகனை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என விரும்பினார். அவரின் விருப்பத்தை காட்பாடி பகுதி செயலாளரான வன்னியராஜா, துணைமேயர் சுனில் போன்றவர்கள் பந்தாவாக அந்த சிறுவனை அழைத்துவந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க செய்தனர். அதோடு, பொதுமக்களுக்கு பிரியாணி தரச்செய்தனர். இவர்கள் அந்த சிறுவன் எப்படி வணங்க வேண்டும், கையெடுத்து கும்பிட வேண்டும் என ட்ரைனிங் தந்தனர். இதனை அருகில் நின்றுயிருந்த வேலூர் எம்.எல்.ஏ கார்த்தி அதிர்ச்சியோடு பார்த்தார்.
கலைஞரின் பிறந்தநாள் விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மகன் இளவரசன் களத்துக்கு அழைத்து வந்துயிருப்பது அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.