Skip to main content

பாஜக வேட்பாளர் பட்டியல் இழுபறி ஏன்? பரபரப்பு தகவல்கள் 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை தமிழகத்தில் மாநில கட்சியின் தலைமையில் கூட்டணியை வைத்துள்ளது. திமுக தலைமையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலல் இடம் பெற்றுள்ள பாஜக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய ஐந்து தொகுதிகளை பெற்றுள்ளது. 

 

மாநில கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல்காந்திதான் பிரதமர், மோடிதான் மீண்டும் பிரதமர் என பிரச்சார களத்திலும் இறங்கிவிட்டது. தேசிய கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில், மாலையில், இன்று, நாளை, நாளை மறுநாள் என வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட காலதாமதம் ஆகிறது. 

 

bjp


 

பாஜக தரப்பில் விசாரித்தபோது, கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்திரராஜன் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். மாநிலத் தலைவராக இருந்து போட்டியிடவில்லை என்றால், டெல்லி மேலிடம் தன்னை மதிக்கவில்லை என்று இங்குள்ளவர்கள் நினைப்பார்கள், ஆகையால் தூத்துக்குடியை கேட்கிறார். ''திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட முடிவு எடுத்து நீண்ட நாட்களாக களப்பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதனை தெரிந்துதான் அதிமுக நமக்கு தூத்துக்குடியை தள்ளிவிட்டுள்ளது. ஆகையால் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பை பெற முடியாது, வேறு தொகுதியை கேளுங்கள், இல்லையென்றால் போட்டியிடும் எண்ணத்தை விடுங்கள்'' என்று நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அட்வைஸ் செய்கிறார்களாம் தமிழிசைக்கு. 
 

ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் போட்டியிட விரும்புகிறாராம். ஆனால் பாஜகவின் சீனியர்களோ, திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது. ஆகையால் பாஜக வேட்பாளராக முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களாம். 

சிவகங்கையில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் எச்.ராஜா. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களத்தில் போட்டியிடுகிறார். கன்னியாகுமரியில் இந்த முறை காங்கிரஸ் பொன்னாருக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. 
 


பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் ஆகவதற்கு காரணம் கோவைதான் என்கிறார்கள். கருப்பு முருகானந்தம், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் சிலர் கோவையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வலியுறுத்தி வருகிறார்களாம். மொத்தம் 25 பேர் போட்டியிடுவதால் இவர்களை சமாதானம் செய்து வேட்பாளரை முடிவு செய்தால் பட்டியல் ரிலீஸ். 

 

சார்ந்த செய்திகள்