ராஜ்யசபா எம்.பி. பதவியைக் குறிவைக்கும் அ.தி.மு.க. சீனியர்கள் சிலரும் மத்திய மந்திரி பதவிக்காக காய் நகர்த்தி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜூலை மாதம் 24- ந் தேதியோடு தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் முடியுது. தமிழ்நாட்டில் ஒரு ராஜ்யசபா எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டு தேவை. அதன்படி பார்த்தால், அ.தி.மு.க. 3 எம்.பி.க்களையும் தி.மு.க 3 எம்.பி.க்களையும் போட்டியில்லாம தேர்ந்தெடுக்க முடியும்.
அதனால் இந்த ராஜ்யசபா சீட்டைக் கேட்டு, மாஜி துணை சபாநாயகரான தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அன்வர்ராஜா, மைத்ரேயன், தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, வேணுகோபால்ன்னு ஒரு பெரிய டீமே பரபரக்குது. இதில் தம்பிதுரைக்காக எடப்பாடியே ஆர்வமா இருந்தாலும், பழைய நிகழ்வு களை வைத்து பா.ஜ.க. நிராகரிக்குதாம். மைத்ரேய னோ ஓ.பி.எஸ். மூலம் ராஜ்யசபாவுக்கும் மத்திய மந்திரி பதவிக்கும் முட்டி மோதறார். அதோடு தனக்கு அதிகப் பழக்கமுள்ள பா.ஜ.க. சீனியரான அருண்ஜெட்லியிடமும் முயற்சி செய்யறார். ம.பி.யிலிருந்து பா.ஜ.க. ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்ட இல.கணேசனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்னு டாக் அடிபடுது. மத்தவங் களும் அவரவர் சோர்ஸில் வரிஞ்சிக்கட்டி நிக்கிறாங்க.
முதல்வர் எடப்பாடியைப் பொறுத்தவரை, ஓ.பி.எஸ். மகனைத் தவிர, யாருக்கு வேணும்னாலும் மத்திய மந்திரி பதவி கொடுங்க, ஓ.பி.எஸ். மகனுக்கு வேண்டாம்ங்கிறதுதான் ஒரே நோக்கம். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டுன்னு ஒப்பந்தம் இருப்பதால, தருமபுரியில் தோற்ற அன்புமணி ராமதாஸுக்கு ராஜ்யசபா பதவி கேட்குறாங்க. தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.க. சைடில் லேசான தடுமாற்றம் தெரியுதாம்.இதனால் பாமக ஆளும் தரப்புக்கு ராஜ்யசபா எம்.பி கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.