'மொழி உரிமையைக் காத்திடக் கண்ணும் கருத்துமாகப் பாடுபடுவோம்' எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தல் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், 'தமிழ்நாட்டை வளர்ப்போம் அதன் தாக்கத்தைப் பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம். மாநில மற்றும் மொழி உரிமைகள் காத்திடக் கண்ணும் கருத்துமாக திமுகவினர் தொடர்ந்து பாடுபட வேண்டும். கடந்த பத்தாண்டுக் கால அதிமுக ஆட்சியில் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு வீணடிக்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைத்த நிலையில் பத்தே மாதங்களில் சமத்துவபுரம் என்ற கலைஞரின் சிந்தனையில் உருவான குழந்தை பிரசவ நேரத்திற்குத் தயாராக இருக்கிறது. கேரளாவில் நடந்த மாநாட்டில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் மாநில உரிமைகளுக்காகக் குரலை உயர்த்தினேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.