நாங்கள் அம்பேத்கர் காட்டிய வழியில் நடக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிட திறப்புவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘அம்பேத்கரின் பெயரில் அரசியல் விளையாட்டு நடத்தாமல், அவர் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் அம்பேத்கரை அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டன. ஆனால், அவரைப் பெருமைப்படுத்தும் விதமான பல முயற்சிகளை மேற்கொண்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மட்டுமே. அவர் எண்ணத்தில் இருந்தவற்றை இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது’ என தெரிவித்தார்.
We are walking on the path shown by Dr. Babasaheb Ambedkar. At the core of Dr. Ambedkar's ideals is harmony and togetherness. Working for the poorest of the poor is our mission: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 4, 2018
மேலும், இன்று பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கர் காட்டிய வழியில் நடந்துகொண்டிருக்கிறோம். நல்லிணக்கமும், ஒற்றுமையுமே அவரது முக்கியக் கொள்கைகளாக இருந்தன. ஏழைகளிலும் ஏழைகளுக்காக உழைப்பதே நமது லட்சியம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.