Skip to main content

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி! விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை!  தமிழக அரசை கண்டிக்கும் பாஜக! 

Published on 20/08/2020 | Edited on 20/08/2020
55

 

 

பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். 

 

அப்போது, "விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை மாநில அரசு பின்பற்றுகிறதா? விநாயகர் சதுர்த்தியில் மட்டும் ஏன் பின்பற்ற முயற்சிக்கிறது?

 

டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு, விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம்; ஊர்வலத்திற்கு அல்ல! விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்" என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் முருகன்.

 

 

சார்ந்த செய்திகள்