Skip to main content

'மிட்நைட் மசாலா பேச்சை ரசிக்கிறார், மக்கள் பிரச்சனை என்றால் தடுக்கிறார் சபாநாயகர்...' - விஜயதாரணி     

Published on 26/06/2018 | Edited on 27/06/2018

சட்டப்பேரவையில் தங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி கொறடா விஜயதாரணி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நக்கீரன் இணையதளத்திடம் கூறியது,

 

vijaydharani



"சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களை நேற்று (25.06.2018) பேச அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையை நேற்று ஒரு நாள் புறக்கணித்தோம். தொடர்ந்து இன்று அவையில் பங்கேற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர், பத்து நிமிடங்களுக்குள் பேச வேண்டும் என்று கூறினார். தொகுதி பிரச்சனைகள், கோரிக்கைகளை பேற்றி பேசத்தான் சட்டப்பேரவை வருகிறோம். இங்கு பேச அனுமதி இல்லையென்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கே.ஆர்.ராமசாமி கூறினார். இதையடுத்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதிலும் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே சீக்கிரம் முடியுங்கள் என்று கூறுகிறார் சபாநாயகர்.

 

 


சட்டப் பேரவையில் புகழ்ந்து பாடுவதற்கு, பாட்டு பாடுவதற்கெல்லாம் நேரக்கணக்கு பார்ப்பதில்லை. முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவர், 'இரவில் தூங்கும்போது பாட்டு கேட்பது சுகமாக இருக்கும்' என்கிறார். அதற்கு ஒரு அமைச்சர், 'நடனத்தோடு பாட்டை ரசிப்பீர்களா? மிட்நைட் பாடல்களையும் ரசிப்பாரா?' என்கிறார். 'உங்களைப் போல் நான் ரசிப்பதில்லை' என்று அதற்கு பதில் அளிக்கிறார். இப்படி மிட்நைட் மசாலா பற்றி பேச நேரம் இருக்கிறது, அனுமதி வழங்குகிறார் சபாநாயகர். மக்கள் பிரச்சனையை பேச முயற்சித்தால் தடுக்கிறார். இப்படித்தான் நடக்கிறது சட்டமன்றம்."
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்