கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்புப் பணிக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, டிஜிபி, தெற்கு ரயில்வே பொதுமேலாளர், விமான நிலைய இயக்குனர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் தெலங்கானா, ஒடிசா, மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் பிரதமருடனான ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அழுத்தமாக எடுத்து கூறியுள்ளனர். ஆனால், அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் ஊரடங்கு பற்றி அழுத்தம் கொடுக்கப்படவில்லை. தமிழகத்துக்கான நிதி குறித்து, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கொடுத்த அழுத்தத்தைக்கூட அ.தி.மு.க. தரப்பில் கொடுக்கவில்லை. மத்திய அரசு சொல்படி நடந்து கொள்வோம் என்பது மட்டும்தான் எடப்பாடியின் நிலையாக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊரடங்கை நீடித்தால் நாமும் உடனே 144-ஐ நீடிக்கலாம் என்று முதல்வரிடம் டி.ஜி.பி. திரிபாதி முன் கூட்டியே கூறியுள்ளார் என்கின்றனர்.