Published on 01/04/2019 | Edited on 01/04/2019
வேலூரில் கடந்த சில நாட்களாக துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, பள்ளி முதலியவற்றில் நடந்துவரும் சோதனைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்த கருத்து.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தான் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கும். நாங்கள் அறிக்கை மட்டுமே சமர்பிப்போம். வருமான வரித்துறை தாக்கல் செய்யும் அறிக்கையை நாங்கள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம் எனத் தெரிவித்துள்ளார்.