Skip to main content

உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்... பாமக, தேமுதிகவை நம்பும் எடப்பாடி! 

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

இடைத்தேர்தல் நடந்த நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய தொகுதிகளின் முடிவு தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதால், அதை மக்களின் மனநிலையாக கருதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என்று திட்டம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்  நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கட்சிகளிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த மூத்த அமைச்சர்களை அனுப்பிவைத்தார் எடப்பாடி. 
 

admk



நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றிபெற்ற உடனே பா.ம.க. ராமதாசையும், தே.மு.தி.க. விஜயகாந்தையும் போனில் தொடர்பு கொண்டு எடப்பாடி நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆனால், அமைச்சர்களை அனுப்பி, நேரில் நன்றி தெரிவிப்பது தான் சரியாக இருக்கும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கூறியுள்ளது.  அதன்படி, ராமதாஸையும், விஜயகாந்த்தையும் சந்தித்து நன்றி தெரிவிக்க அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார் எடப்பாடி. உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்று எடப்பாடி நினைப்பதாக சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்