Skip to main content

வி.சி.க. போட்டியிடும் 6 தொகுதிகள் வெளியீடு!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

VCK CONTEST ASSEMBLY CONSTITUENCIES ANNOUNCED


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் மாநில மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிஸியாக உள்ளனர்.

 

இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையிலான குழு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகள் இறுதியான நிலையில், தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

அதன்படி, 4 தனி சட்டமன்றத் தொகுதிகள், 2 பொதுச் சட்டமன்றத் தொகுதிகள் என 6 சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. வானூர் (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. 

 

இதில், வானூர் உட்பட 5 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க.வை எதிர்த்தும், திருப்போரூரில் பா.ம.க.வை எதிர்த்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்