Published on 27/05/2019 | Edited on 27/05/2019
நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளராக தொழிலதிபர் வசந்த குமார் போட்டியிட்டு வென்றார்.

--LINKS CODE------
அவர் ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட, நாங்குநேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். தற்போது எம்.பி. யாக பதவியேற்க உள்ள அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். சபாநாயகர் நேரம் ஒதுக்கி தந்தவுடன் ராஜினாமா கடிதம் அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நாங்குநேரி தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.