Skip to main content

"திருமாவளவனை அடிக்கணும்"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

 

vck



இதனைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்தார். 
 

 

actress

 


இந்நிலையில் நடிகையும், நட இயக்குனரனும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு வருகிறார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் எனவும், திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க... நடிப்பு பத்தல எனவும் கமெண்ட் செய்துள்ளார். மேலும் பல சர்ச்சை கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இதனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்