Published on 20/03/2021 | Edited on 20/03/2021
வருகிற, ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரதான கட்சிகளின் சார்பில், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் பிரச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அதேபோல் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறனுடன் மவுண்ட்ரோடு கோபால்தாஸ் தெருவில் ஒரே வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.