






Published on 26/08/2019 | Edited on 26/08/2019
உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றப்பின்னர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அந்த வகையில் நேற்று (25.08.2019), சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கையில் “முதல்கட்டமாக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப் போகிறோம். அதற்காக டைம் லிமிட் ஒன்றை கொடுத்து இருக்கிறேன். செப்டம்பர் 14 இல் இருந்து நவம்பர் 14 அவகாசம் கொடுத்திருக்கிறேன். ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் இளைஞரணி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதுதான் முதல் இலக்கு. கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்” என்று கூறினார்.