Skip to main content

“உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது” - டிடிவி  தினகரன் 

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

ttv dinakaran talks about udhayanidhi stalin minister 

 

திமுகவின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின்  கொடுத்த பரிந்துரை கடிதத்தை  ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக்கொண்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 09.30 மணி அளவில் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

 

இதுகுறித்து அமமுக தலைவர் டிடிவி  தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "உதயநிதி ஸ்டாலின் திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் அவர் அமைச்சர் ஆகிறார். இதில் ஒன்றும் தவறில்லை. 89இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது ஸ்டாலின் அமைச்சர் ஆனார். ஆனால் இதில் ஏதோ ஒரு அவசரம் ஸ்டாலினுக்கு இருக்கிறது எனத் தெரிகிறது. அதற்கு என்ன காரணம்  என்பதைக் காலம்தான் உணர்த்தும்" என்றார்.

 

முதல்வர் ஸ்டாலின்  புதுச்சேரியிலும் திராவிட மாடல்  ஆட்சி அமையும் என்று பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் சொல்லிட்டு ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. பாண்டிச்சேரி மக்கள் தமிழகத்தில் நடந்து வருவதைக் கவனித்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் எடுப்பார்கள்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்