Skip to main content

வைகோவும், சீமானும் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்க வேண்டாம் : கமல்ஹாசன்

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
kamal twit

 

’’அன்பார்ந்த ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான், வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்க வேண்டாம்.  எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற  அனுமதிப்போம்.   வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு.’’என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

திரிபுரா மாநிலம் பெலோனியா பகுதியில் உள்ள கல்லூரி சதுக்கப் பகுதியில் சி.பி.எம். ஆட்சியில் வைக்கப்பட்ட ரஷ்யப் புரட்சியாளர் விளாதிமிர் லெனினின் சிலையை பாஜகவினர் இடித்துத் தள்ளினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் இன்று காலை பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தன் முகநூல் பதிவில்,  லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில். இன்று திரிபூராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை. இவ்வாறு அவர் முகநூல் பதிவில் கருத்து தெரிவித்திருந்தார்.

 

எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு அனைத்து கட்சியினர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், கமல்ஹாசன் தனது எதிர்ப்பை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்