Skip to main content

பாமக யாருக்காகவும் இல்ல... அன்புமணி பேச்சால் அதிருப்தியில் அதிமுக தலைமை!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

பா.ம.க.வும், ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது, அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது என தமிழருவி மணியன் சமீபத்தில் பேசியது அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் பேசும் போது, பாமக கட்சியை 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தி வருவதாகவும். கூட்டணி குறித்து ஆறு மாதம் கழித்துதான் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ரஜினி, பாமக, கமல் என்று கூட்டணி அமைக்கலாம் என்றும், அப்படி ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் பாமக தயாராகி வருவதாக சொல்லப்பட்டது. 
 

pmk



இந்த நிலையில் ,மேட்டூர் அடுத்த மேச்சேரியில் பாமகவின் முப்படை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புணி, பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆவதாக கூறினார். பின்தங்கியுள்ள மக்களின் உண்மை நிலையை அறிய மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். மேலும் திமுக, அதி.மு.க.,காங்கிரஸ் போன்ற கட்சிகள், ஆட்சி செய்வதற்காக பாமக தொடங்கவில்லை என்றும், பாமக கட்சி ஆட்சியமைக்கவே கட்சி தொடங்கியதாக அன்புமணி பேசினார். அன்புமணியின் இந்த பேச்சால் அதிமுக தலைமை சற்று அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாமக கூட்டணி அமையும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வரும் நிலையில் தற்போது அன்புமணி திமுக, அதிமுக ஆட்சி அமைக்க பாமக கட்சி தொடங்கவில்லை என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்