Skip to main content

தோற்றாலும் கெத்து குறையாத திமுக... உடன்பிறப்புகளுக்கு நிம்மதி கொடுத்த தேர்தல் கணக்கு!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுக உறுப்பினர் ராதாமணி சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானதால், அந்தத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 84.41 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பம் முதலே, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் ஆதிக்கம் செலுத்தினார். அனைத்து சுற்றுகளின் வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், முத்தமிழ்ச்செல்வன் 1,13,428 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் மட்டுமே பெற்றதால், 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  

 

jl

இதுதொடர்பாக பேசிய தமிழக முதல்வர், " நாங்கள் உண்மையை மட்டும் பேசியதால்தான் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. திமுக மாதிரி பொய் வாக்குறுதிகளை நாங்கள் கொடுக்கவில்லை. அதனால் தான் அவர்கள் படுதோல்வியை அடைந்தார்கள். எங்களின் உண்மைக்கு கிடைத்த வெற்றியாகத்தான் இதனை பார்க்கிறோம்" என்றார். முதல்வர் சொல்வது போல் இது திமுகவுக்கு படுதோல்வியா என்று தேர்தல் கணக்குகளை பார்த்தால் முதல்வர் சொல்வதன் உண்மை தன்மையை அறியலாம். அந்த வகையில், கடந்த 2016 ஆண்டு திமுக வென்ற விக்கிரவாண்டி தொகுதியில் திமுக பெற்ற வாக்குகள் 63,757. தற்போது திமுக பெற்ற வாக்குகள் 68,646. கிட்டதட்ட 5000 வாக்குகள் திமுகவிற்கு அதிகம் கிடைத்துள்ளது.

அந்த வகையில் படுதோல்வி என்று முதல்வர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது என்கிறார்கள் உடன்பிறப்புக்கள். படுதோல்வி என்றால், கடந்த 2014ம் ஆண்டு வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக பெற்ற வாக்குகள் கிட்டதட்ட 3 லட்சத்துக்கும் மேல், ஏசிஎஸ் பெற்ற வாக்குகள் 3.5 லட்சம் வாக்குகள். திமுக பெற்ற வாக்குகள் 2.5 லட்சம் வாக்குகள். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வேலூர் இடைத்தேர்தலில் ஏசிஎஸ், அதிமுக கூட்டணியின் மொத்த வாக்குகள் 7 லட்சம் என்ற நிலையில், கண்டிப்பாக வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த கூட்டணி, திமுகவை விட 8 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றது எப்படி? இதுதான் படுதோல்வி என்கிறார்கள் திமுகவினர். 

 

 

சார்ந்த செய்திகள்