பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கொடுக்கும் விருந்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். இதற்காக, பாமக தலைவர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்திக்க திண்டிவனம் வழியாக வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திண்டிவனம் புறவழிச்சாலை அருகே தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் வரவேற்பு அளித்தார்.
பின்னர் நிர்வாகிகளிடையே முதல்வர் பேசியதாவது: ‘’அதிமுக தலைமையில் மெகா கூட்டணி பல்வேறு கட்சிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. அம்மா இருக்கும் போது எப்படி வெற்றி பெறச்செய்தீர்களோ அதே போன்று நான் இல்லை யார் போட்டியிட்டாலும் வெற்றிபெற செய்ய வேண்டும்.
மத்திய நிதியில் போதுமான நிதியை பெற்று வளமான தமிழகமாக மாற்றுவதற்கு இந்த தேர்தல் மூலம் வெற்றி பெற வேண்டும். மத்தியில் போதுமான நிதியை பெற்று எதிர்காலம் தமிழகத்தில் வளமாக அமைவதற்கு அதிமுக வெற்றி பெற வேண்டும். அம்மா மறைவுக்குபிறகு கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் திமுகவினர் பல்வேறு வஞ்சக எண்ணத்துடன் பல்வேறு பழியை சுமத்தி வருகின்றனர். அம்மாவிற்கு நினைவு மணிமண்டபம் கட்டுவதற்கு பல்வேறு வழக்குகள் போட்ட நயவஞ்சகர்கள் திமுகவினர். தலைவர் எம்.ஜி.ஆர் சொன்னது போல திமுக ஒரு தீய சக்தி.
மத்தியிலே அதிமுக எதிரிகளை விரட்டியக்க வேண்டிய தேர்தல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல். இன்னும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர இருக்கின்றன. அம்மா கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அதிமுக கூட்டணி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களை இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று திண்டிவனத்தில் அதிமுக நிர்வாகிகளிடையே பொதுக்கூட்ட மேடையில் பேசினார்.