முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், அதிமுக இரண்டாக உடைந்ததால் தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை நாடாளுமன்றத் தேர்தலில் பிரிப்பார். இது திமுகவுக்கு சாதகமாக அமையும். அதிமுகவுக்கு பாதகமாக அமையும்.
கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறிய பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்த பாமக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி என்ன?
சந்தர்ப்பததிற்கு ஒரு வேலையை செய்துவிட்டு அதை தமிழ் சமூகத்திற்கு தான் செய்கிறோம் என்று கூறும் பாமகவின் ஏமாற்று அரசியல் இனி மக்களிடம் எடுபடாது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை வரும் 27ஆம் தேதி நடக்கும் முக்குலத்தோர் புலிப்படை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். நான் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் குறித்து ஆலோசனை செய்யப்படும். தினகரனுக்கு ஆதரவு அளிப்பது குறித்து 27ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்காவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு முக்குலத்தோர் சமுதாய மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள். இவ்வாறு கூறினார்.