தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அ.தி.மு.க.- பா.ஜ.க. நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்ததை நடத்தினர்.
இந்த நிலையில், நேற்று (09/03/2021) அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க.வின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தின் படி, திருவண்ணாலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி , தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 20 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுகிறது.