Published on 10/07/2021 | Edited on 10/07/2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவை அடுத்து திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக திமுகவில் மாற்று கட்சியினர் தங்களை இணைத்துக்கொண்டுவருகின்றனர்.
நேற்றுமுன்தினம் (08.07.2021) மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 300 பேருடன் நாளை காலை 10.30 மணிக்கு அவர் திமுகவில் இணைய உள்ளார் எனக் கூறப்படுகிறது.