அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான தங்க தமிழ்செல்வன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி: சமூக வலைதளங்களில் அந்த இரண்டு கோடி ரூபாய் என்னாச்சி என்று அமமுக தொண்டர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களே?
பதில் : அதே நான் திருப்பிக் கேட்கிறேன். பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை கோடிகள் எனக்கு கொடுத்தார்கள். கணக்கு கொடுத்தால் நானும் கணக்கு கொடுக்கிறேன். எத்தனை கோடி செலவுக்கு கொடுத்தீங்க. அதில் எத்தனை கோடி நான் எடுத்துக்கொண்டு போனேன் என்பதை கரெக்டா கணக்கு கொடுத்தால், நானும் கணக்கு கொடுக்கிறேன். இல்லன்னா நீங்க எவ்வளவு கொடுத்தீங்க. எவ்வளவு செலவு செஞ்சேன் என்ற தெளிவான கணக்கை மீடியாக்கிட்ட சொல்கிறேன்.
கேள்வி: செலவுக்கு கொடுத்த பணத்தைத்தான் இவர் எடுத்துக்கொண்டு திமுகவுக்கு கிளம்பிட்டாரு என்கிறார்களே?
பதில் : தங்க தமிழ்செல்வனை இரண்டாயிரம் கோடி கொடுத்தாலும் அசைக்க முடியாது.
கேள்வி : தேனியில் கூட்டம் போடுவதற்கான செலவே அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் எடுத்துக்கொண்டு போன பணம்தான் என்கிறார்களே? அந்த இரண்டு கோடிக்கு என்னதான் பதில்?
பதில் : துரோகக் கூட்டம் என்று புரிந்து கொண்டுதான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன். டிடிவி தினகரன் சொல்லி அமமுகவினர் இதனை பரப்பினால், அந்த டிடிவி தினகரனை நான் கேட்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்ற இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் கொடுத்தீங்க. நான் எவ்வளவு செலவு பண்ணினேன். பட்டியலை நான் விடத்தயார். டிடிவி தினகரன், நான் இரண்டு கோடி எடுத்தேன் என்பதை நிரூபிக்க அவரும் கணக்கை விடட்டும். சவால். சவாலாகவே நான் கேட்கிறேன்.
கேள்வி : ஆமாம் என்று கொடுத்ததாக சொன்னால்?
பதில் : நான் பட்டியல் விடுகிறேன்.
கேள்வி : ஒரு வேட்பாளர் ஒரு தேர்தலுக்காக 70 லட்சம் ரூபாய் வரை செய்யலாம் என்றால்?
பதில் : இரண்டு கோடி எடுத்துக்கொண்டு போனார் என்று சொன்னால் என்ன அர்த்தம்.
கேள்வி : டிடிவி தினகரன் ஒவ்வொரு தொகுதிக்கும் எத்தனை கோடி செலவு செய்தார்?
பதில் : அதுதான் கேள்வியா இருக்கு என்று நான் சொல்லுகிறேன். யாரோட பணம். எங்கிருந்து வந்த பணம்.
கேள்வி : ஜெயலலிதா பணமெல்லாம் இப்பதான் வெளியே வருகிறதா?
பதில் : எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்போதே உயில் எழுதி வைத்தார். கலைஞர் உயிரோடு இருக்கும்போதே அவரது வீட்டை மருத்துவமனைக்காக என்று உயில் எழுதி வைத்தார். ஜெயலலிதாவுக்கு யாருமே இல்லை என்றபோது, தினகரன் பெரிய ஆலோசகராக இருந்திருக்கிறார். ஜெயலலிதா புகழ் வளரணும் என்றால் அவரது சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி வைத்திருக்க வேண்டும். ஏன் விடவில்லை. இவ்வாறு கூறினார்.