தமிழ்நாட்டு அரசியலை பரபரப்பாக்கிக்கொண்டிருக்கிறது சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார், கருக்கலைப்பு தொடர்பாக அந்த ஆடியோவில் இன்னொரு நபரோடு கவலையுடன் பேசுகிறார்.
இந்த ஆடியோவில் எதிர்முனையில் பேசும் குரல் தன்னுடையது அல்ல என்றும், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கடுமையாக எதிர்க்கும் காரணத்தினால் தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது களங்கம் கற்பிக்கவேண்டும் என்று இந்த ஆடியோவை உருவாக்கி வெளியிட்டிருப்பதாக கூறியுள்ளார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்.
மேலும் அவர், கடந்த ஓராண்டுக்கு முன்னரே, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தான் யாருடனோ இருப்பதுபோல ஒரு புகைப்படத்தை உருவாக்கி அதனை அவர்கள் பரப்பியதாகவும், அதன் மீது புகார் கொடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் மீண்டும் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அப்படியென்றால் இது யார் குரல்???? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது???? இதோ அந்த ஆடியோ...
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு என்பவர் பெயரில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கும் புகார் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ஒரு பரிந்துரைக்காக தன்னை அணுகிய பெண் ஒருவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாகவும், அதனால் உருவான கருவை கலைக்க வேண்டும் என மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த புகாரில், இதுகுறித்து காவல்நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரை ஏற்க மறுத்ததாகவும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தீவிரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றால் உண்மைகள் விரைவில் வெளிவரும்.