Published on 09/02/2022 | Edited on 09/02/2022
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மகாகவி பாரதியார் நகரில் 35வது வார்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டில்லிபாபுவின் தேர்தல் பணிமனையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.