


Published on 28/11/2020 | Edited on 28/11/2020
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து, 7ஆம் ஆண்டு துவக்க விழாவை மாநிலம் முழுக்க அக்கட்சியினர் கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.