Published on 19/06/2019 | Edited on 19/06/2019
எடப்பாடி இன்னும் சசிகலாவை நம்பிட்டு தான் இருக்கார்னு அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இது பற்றி விசாரித்த போது சசிகலாவுக்கான முதல்வர் எடப்பாடியின் மெசேஜை சிறைக்குப் போய் சொல்லியிருப்பவர் எடப்பாடியின் மனைவி ராதா. சிறையில் இருந்து நீங்க எப்ப ரிலீஸாகி வெளியில் வந்தாலும், கட்சியை உங்களிடம் உடனடியாக ஒப்படைக்க நாங்க ரெடியாகவே இருக்கிறோம். இதை இப்ப பகிரங்கமா சொல்லமுடியலை.
![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/UCp1eKlJPx_kBhhIw4Xi3VTYDaI_dA5QHIDcyJpzmR4/1560928406/sites/default/files/inline-images/210.jpg)
TAG2 ---------------------------
காரணம், ஓ.பி.எஸ்., டெல்லி பா.ஜ.க.வின் ஆதரவோடு, கட்சியை அழிக்கப் பார்க்கிறார்ன்னு சொல்லியிருக்கார். சசிகலாவோ, ஓ.பி.எஸ்.சும் எங்க பக்கம் தூதுவிட்டுக்கிட்டுதான் இருக்காரு.. நான்தான் அவரை நெருங்கவிடலைன்னு சொல்லியிருக்காரு. சசிகலாவும் எடப்பாடியும் இன்னமும் பரஸ்பர நம்பிக்கையோடு தான் இருக்காங்கன்னு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.