Published on 01/04/2019 | Edited on 01/04/2019
இன்று அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அசோகன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர், அரக்கோணம் அருகேயுள்ள சோளிங்கரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின், எனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒருபோதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர் எனக்கூறியுள்ளார். மேலும் அவர் அதிமுக, பாஜக குறித்தும் விமர்சித்துள்ளார்.