கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 39 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு தொடருமா,தொடராத என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. வரும் 19 ஆம் தேதி மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அரவக்குறிச்சி தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது ஆட்சி மாற்றம் எப்படி ஏற்படும் என கணக்கு போட்டு மக்களுக்கு சொல்லு புரியவைத்தார். ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணும் போது எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு போவது உறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் இன்னும் இரண்டு ஆண்டு கால ஆட்சி இருக்கிறது. இப்படி இருக்க எடப்பாடி அரசு எப்படி வீட்டுக்கு போக முடியும் என்று ஒரு கேள்வி உங்களிடம் உள்ளது என்பது எனக்கு தெரியும்.அதாவது, எடப்பாடி தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி மெஜாரிட்டி இல்லாத நிலையில் மைனாரிட்டியாக ஆட்சி நடத்தி வருகிறது. நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும், இனி நடைபெற இருக்கிற 4 சட்டமன்றத் தேர்தலிலும் மக்களின் பெரும் ஆதரவுடன் திமுக ஆட்சியை கைப்பற்றும் என்றும். ஏற்கனவே திமுக கூட்டணியில் 97 எம்.எல். ஏ.க்கள் இருக்கிறோம் என்றும். தற்போது இடைத்தேர்தல் 22தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் 119 எம்.எல்.ஏ.க்கள் வந்துவிடும். இதனால் 23 ஆம் தேதிக்கு பிறகு திமுகவின் ஆட்சி அமையும் என்று பிரச்சாரத்தின் போது கூறினார்.