விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்,அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நடிகை காயத்ரி ரகுராம், பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் பலர் இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வந்தனர்.
![vck](http://image.nakkheeran.in/cdn/farfuture/_Jei1EJb_gM-vDMll401pgHZ6cbkmk5oSg-hDGsZn0I/1575375426/sites/default/files/inline-images/618_1.jpg)
பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் திருமா.
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 1, 2019
பாலுக்கும் காவலாகவும், பூனைக்கும் நண்பனாகவும் இருக்க @thirumaofficial வால் மட்டுமே முடியும்.
ஒரு பக்கம் கூச்சமின்றி பரிசு பொருளுக்கு கைகுலுக்கிய திருமா, இன்று உருத்ரகுமாரனுடன் குலாவிட மனசாட்சி உறுத்தாதோ? pic.twitter.com/Ihqzl1K0Pz
இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனைப் பற்றி பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில், "பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் திருமா. பாலுக்கும் காவலாகவும், பூனைக்கும் நண்பனாகவும் இருக்க திருமாவால் மட்டுமே முடியும். ஒரு பக்கம் கூச்சமின்றி பரிசு பொருளுக்கு கைகுலுக்கிய திருமா, இன்று உருத்ரகுமாரனுடன் குலாவிட மனசாட்சி உறுத்தாதோ?" என்று பிஜேபி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பிஜேபியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.