![Speech at the EPS Team Candidate thennarasu Introductory Meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZIIVFRAgzNY1DYCB1hqU3m_nT6-qJRywA9KdXxPx0Ss/1675268420/sites/default/files/inline-images/777_14.jpg)
எங்கள் வீட்டில் வாட்ச்மேன், நாய் இரண்டும் இல்லை. மக்கள் எப்பொழுதும் சந்திக்கலாம் என அதிமுக இபிஎஸ் வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தரப்பு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தது. தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது.
இந்நிலையில் இன்று அதிமுக இபிஎஸ் அணி சார்பில் அதிமுக தேர்தல் பணிமனை துவங்கப்பட்டு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என அதிமுக இபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் பணிமனையில் பேசிய வேட்பாளர் தென்னரசு, “ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. ஈரோட்டில் இனி 50 ஆண்டுகாலத்திற்கு குடிநீர் பிரச்சனையே இல்லாத அளவிற்கு மிகப் பெரிய திட்டத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம். திமுக எந்த திட்டத்தையும் ஈரோட்டிற்கு கொண்டு வரவில்லை.
எங்கள் வீட்டில் வாட்ச்மேன் இல்லை. நாயும் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் எங்கள் வீட்டிற்கு நீங்கள் வரலாம். எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்” எனக் கூறினார்.