Published on 11/07/2019 | Edited on 11/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் பா.ஜ.க. கர்நாடக அரசியலிலும் தன் ஆட்டத்தைக் கச்சிதமா நடத்த ஆரம்பித்து விட்டது என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். காங்கிரஸ் ஆதரவோடு கர்நாடகாவை ஆளும் குமாரசாமி தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாங்க. அங்கே பா.ஜ.க. நுழைந்து குட்டையைக் குழப்பியதால் 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திட்டாங்க. இந்த 17 பேரில் 6 பேர், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கணும்னு குரல் கொடுக்க 4 பேர் காங்கிரஸின் இன்னொரு சீனியரான மல்லிகார்ஜுன கார்கே முதல்வராகட்டும்ன்னு கொடி பிடிக்கிறாங்க.
![karnataka](http://image.nakkheeran.in/cdn/farfuture/mjlCpFa4hkI44TmhR2EzulD-C12przS9FZ6tYtlSxCo/1562837140/sites/default/files/inline-images/558.jpg)
இந்த நிலையில் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பா.ஜ.க. தீவிரமா இருக்குது. குமாரசாமி தன் பலத்தை நிரூபிக்க, கர்நாடக கவர்னர் வாஜ்பாயி வாலா விரைவில் அழைப்பார். இதன் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறும் நிலை ஏற்பட்டிருக்கு. பதவியில் உட்கார்ந்து ஒரு வருடம் ஆவதற்குள் பரிதாப நிலையில் இருக்கார் குமாரசாமி. காங்கிரஸ் மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்வதால், எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைக்க அவர்களுக்கு வாரிக்கொடுத்த வாரியப் பதவிகளும் அள்ளிக் கொடுத்த அன்பளிப்புகளும் இந்த நெருக்கடிக்கு உதவுவது போல் தெரியலைனு அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.