Skip to main content

“அதிமுகவின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது” - சீமான்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Seeman says The work of AIADMK is highly commendable

 

கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு 65அடி உயர தீரன் சின்னமலை நினைவு கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

 

அதில் அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பே தயாராகி எங்கள் பயணத்தை தொடங்கிவிட்டோம். நான் ஒரு தமிழ் தேசிய மகன். அதனால், தமிழ் நிலத்துக்கான தேர்தலில்தான் நான் போட்டியிடுவேன். என்னுடைய கனவு, இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது கிடையாது. என்னுடைய தம்பி, தங்கைகளை நான் அனுப்புவேன். தமிழ் தேசியத்தில் உரிமை என்ற கனவு தான் என்னுடைய கனவு. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியோ அல்லது பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடியோ ஆகியோர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து நான் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். 

 

இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என்று வரும் பொழுது சில விஷயங்களை நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை, காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பார்கள். அதே போல், கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரஸ் கட்சியும் எதிர் எதிராக இருக்கிறது. மேலும், டெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸை எதிர்க்கிறார். ஆனால், இந்தியா என்ற கூட்டணியில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இது போன்ற கூட்டணியால், மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவை எடுப்பது எப்படி சரியாக இருக்கும்?. இதனால், இந்த கூட்டணி வேடிக்கையாகத் தான் இருக்கிறது. 

 

பேரறிஞர் அண்ணாவை பற்றி பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு தி.மு.கவில் இருந்து ஆர்.எஸ்.பாரதி மட்டும்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து முதல் அமைச்சரின் கருத்து என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அண்ணாவின் புகைப்படத்தை கொடியில் வைத்திருக்கும் அதிமுக அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என்று குரல் கொடுத்து இருக்கிறார்கள். அதிமுகவின் இந்த செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது” என்று கூறினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்