Published on 12/06/2019 | Edited on 12/06/2019
இன்று அதிமுக கூட்டத்தில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அல்லது இரட்டை தலைமை வேண்டுமா என்று விவாதிக்கப்பட்டு இறுதியில் தற்போது நடைமுறையே பின்பற்றலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து அமித்ஷாவிடம் தெரிவிக்க அதிமுக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.பாஜக தலைமையோ இப்போதைக்கு அதிமுகவில் இரட்டை தலைமையே இருக்கட்டும் என்று அறிவுறுத்தியதாக கூறுகின்றனர்.மேலும் அதிமுகவிற்கு வலிமையான தலைமை ஏற்க சசிகலா தான் சரியாக இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.சமீப காலமாக சசிகலா விடுதலையாகிறார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பின்னால் அரசியல் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.மேலும் சசிகலா தலைமையின் கீழ் அதிமுக வந்தால் மட்டுமே அதிமுக வலிமையான கட்சியாக வர வாய்ப்பிருக்கிறது என்று பாஜக கூறியதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் இந்த தலைமை பிரச்னை செய்தியும்,சசிகலா விடுதலை செய்தியும் சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்கியுள்ளது. இந்த இரண்டு சம்பவத்துக்கு பின்னாலும் பாஜக அரசியல் இருக்க கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அதனால் தான் எந்த ஒரு அதிரடி முடிவும் இன்று எடுக்கப்படவில்லை என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.