Skip to main content

சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹரி நாடாரின் பனங்காட்டு படை... பின்னடைவை சந்தித்த சீமான்!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1,13,428 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,913 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் சுமார் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தியை வீழ்த்தி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 95377 வாக்குகளும், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 61932 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் அதிமுக வேட்பாளர் திமுக வேட்பாளரை விட 33,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 

seeman



இந்த நிலையில் நாங்குனேரியில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா நாராயணன் 3494 வாக்குகள் பெற்றுள்ளார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ. ஹரி நாடார் 4243 வாக்குகள் பெற்றுள்ளார். சீமான் கட்சி  2% சதவிகித வாக்குகளும், ஹரி நாடார் கட்சி 2.49% சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியை விட 749 வாக்குகள் கூடுதலாக ஹரி நாடார் பெற்றுள்ளார். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அமமுக கட்சி போட்டியிடாத நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி 7% சதவிகித வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பனங்காட்டு படை கட்சி சீமான் கட்சியை விட 749 வாக்குகள் பெற்று சீமான் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனர்.   

 

சார்ந்த செய்திகள்