
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் சார்பில் மறைந்த மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைத்து தரப்படும் என தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் மறைந்த மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் இன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றிய மூக்கையா தேவருக்கு சிறப்பு செய்யும் விதமாக உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைத்துத் தரப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில் வத்தலகுண்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம் தலைமையில் திரண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நெஞ்சார்ந்த நன்றியினை அவர்கள் தெரிவித்தனர்.