Skip to main content

அன்று திருவள்ளுவர், இன்று அம்பேத்கர் - தொடரும் காவி சர்ச்சை

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Thirumavalavan condemns poster of Ambedkar dressed in saffron

 

சட்டமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவை அனுசரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே காவல்துறையினரால் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது.

 

ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி, அது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தி விவாதத்திற்கு உள்ளான நிலையில், தற்போது அம்பேத்கருக்கும் காவி உடை அணிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்ததற்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில், “சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை; பார்ப்பனிய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை, குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்