வருகிற 19ஆம் தேதி தமிழக்தில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அணைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சூலூர் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.குறிப்பாக சீமான் மேடைகளில் பேசும் போது இளைஞர்களை கவரும் வண்ணம் பேசுவதும், அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிப்பதும் அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். இது போல் சீமான் பிரச்சார கூட்டங்களில் பொருளாதாரம் பற்றி பேசும் போது அந்த கருத்து பல விமர்சனங்களயும்,விவாதத்தையும் ஏற்படுத்தும்.

இந்த நிலையில் நேற்று சூலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான் ' என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால், பள்ளி செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை, பள்ளி செல்வேன் என்று அடம் பிடிக்க வைத்து விடுவேன் என்று கூறினார். மதிப்பெண்களைக் காட்டிலும் மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதுதான் மிக முக்கியான செயலாகும். ஊர் சுற்றிப்பார்ப்பதுதான் உங்களுக்குப் பிடிக்குமா உங்களுக்கு சுற்றுலாத்துறையில் வேலைக் கொடுக்கப்படும்' எனப் பேசினார். இதற்கு முன்பு ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக மாற்றுவது குறித்து சீமான் பேசியது பெரும் சர்ச்சைகளும் கேலிகளும் உருவான நிலையில் அடுத்து சுற்றுலாத்துறை வேலை குறித்து பேசியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.