







Published on 07/05/2020 | Edited on 07/05/2020
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புச்சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்புச்சட்டை மற்றும் மாஸ்க் அணிந்து கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் மு.க.ஸ்டாலினின் மனைவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், தங்கபாலு, கி.வீரமணி, பாலகிருஷ்ணன், ரவிக்குமார் எம்.பி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கருப்புச்சின்னத்துடன் போராட்டம் நடத்தினர். சென்னை அண்ணா நகர் இல்லத்தில் கருப்புச்சட்டை மற்றும் கருப்பு துண்டுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி போராட்டம் நடத்தினார்.